நயன், த்ரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி... நவக்கிரக நாயகிகளின் கன்னிராசி

வெள்ளி, 6 ஜூன் 2014 (19:36 IST)
வாலு படத்தை இயக்கும் விஜய் சந்தர் அப்படம் முடியும் முன் அடுத்தப் படத்துக்கான அட்வான்ஸை வாங்கிவிட்டார். படத்தின் பெயர் கன்னிராசி. பாண்டியராஜன் பீக்கில் இருந்தவேளை அவர் நடித்த படத்தின் பெயர். படத்தின் பெயரை பயன்படுத்த முறைப்படி அவரிடம் அனுமதி பெற்றிருக்கிறார்கள்.
கன்னிராசியின் ஸ்பெஷல், மொத்தம் 9 நாயகிகள் இந்தப் படத்தில் இடம்பெறுகிறார்கள். நயன்தாரா, த்ரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி என்று விஜய் சந்தர் சொல்லும் பெயர்களை கேட்கும் போது கிர்ர்ர்ராகிறது தலை. இவர்கள் நடித்தால் மட்டுமே கன்னிராசி களைகட்டுமாம்.
 
கன்னிராசியின் ஹீரோ ஜெய், இன்னொரு ஹீரோவாக சந்தானம். சிம்பு இப்போது விஜய் சந்தரின் தோழராகிவிட்டதால் அவரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கும் திட்டமும் உள்ளது. கன்னிராசியின் ஒரேயொரு குறை என்றால், இவ்வளவு சங்கதிகளும் இன்றுவரை விஜய் சந்தரின் ஐடியாவாக மட்டுமே உள்ளது. அவர் குறிப்பிட்ட நடிகைகளில் ஒருவரிடம்கூட அவர் கதையும் கூறவில்லை, கால்ஷீட்டும் பெறவில்லை.
 
கன்னிராசி தண்ணியில் எழுதிய ராசியாகிவிடப் போகுது, ஜாக்கிரதை.

வெப்துனியாவைப் படிக்கவும்