நயன்தாரா படத்தில் தமன்னா

வெள்ளி, 9 மே 2014 (14:13 IST)
உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படம் நண்பேன்டா. முழுக்க காதலும், காமெடியும் கலந்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். 
கதைப்படி முக்கியமான காட்சி ஒன்றிக்கு தற்போதைய பிரபலமான நடிகை நடிக்க வேண்டும். அப்படி யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து, தமன்னா நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரை அனுகியிருக்கிறார்கள். 
 

ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே தோ‌ன்றும் காட்சிக்காக பத்து லட்சம் சம்பளம் கேட்டிருக்கிறார். அவ்வளவு பணமா..! என்று உதயநிதி தரப்பு வாய் பிளக்க, ஒரு கோடி சம்பளம் வாங்கும் நடிகைக்கு பத்து லட்சம் தருவதில் ஒன்று‌ம் தவறில்லை. 
வேறு ஒரு நடிகை கதாநாயகியாக நடிக்கும் படத்தில் இது போன்ற கவுரவ தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதே பெரிய விஷயம். என்று தமன்னா தரப்பில் பேச, நியாம்தான் என ஒப்புக் கொண்டு பத்து லட்சம் சம்பளம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்