பழைய படங்களின் பெயரை பயன்படுத்தினாலோ, பிரபலங்களின் பெயரை படப்பெயராக வைத்தாலோ சம்பந்தப்பட்டவர்களிடம் நோ அப்ஜெக்ஷன் கடிதம் வாங்க வேண்டும் என்பது தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்படுத்தியிருக்கும் விதி. அதன்படி த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்துக்கு த்ரிஷா, நயன்தாரா இருவரிடமும் நோ அப்ஜெக்ஷன் கடிதம் வாங்க வேண்டும்.
நயன்தாரா, த்ரிஷா இருவரின் பெயரையும் பயன்படுத்துவதற்கு ஜீ.வி.பிரகாஷ் சில லட்சங்கள் தர முன் வந்ததாகவும், அப்படி அவர் தந்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சில வாரங்கள் முன்பு கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.