தேச ப‌க்தியை சொல்லும் ஒளியும் ஒலியும்!

புதன், 7 ஜனவரி 2009 (22:23 IST)
அமெ‌ரிக்கவாழ் இந்தியர்கள் இருவர் - ராஜு வெங்கட்ராமன், சிவகுமார் பாலசுப்ரமணியன் இணைந்து தண்டினி கி‌ரியேஷன்ஸ் சார்பில் தயா‌ரிக்கும் படம், ஒளியும் ஒலியும்.

படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி படத்தை இயக்குகிறவர் சக்தி செல்லம். எம்.‌ஜி.ஆர்., அப்துல் கலாம் ஆகியோர் கையால் விருது வாங்கியவராம் இவர்.

படத்தில் நிறைய ஆச்ச‌ரியங்கள். பாலம் அமைப்பை நடத்திவரும் கல்யாணசுந்தரம் இந்தப் படத்தில் கான்ஸ்டபிள் கோவிந்தசாமி என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

சுதந்திர போராட்டத்துக்கு முந்தையை காலகட்டத்தை சொல்லும் இந்தப் படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத இளம் பெண்ணை நடிக்க வைத்துள்ளனர்.

உடல்நிலை காரணமாக சிலகாலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த நாகேஷின் மகன் ஆனந்தபாபு இந்தப் படத்தில் நடித்திருப்பதுடன் ஒரு பாடலுக்கு ஆடவும் செய்துள்ளார்.

பாலம் கல்யாணசுந்தரத்துக்கும் ஒரு பாடல் உள்ளது. தாய்ப் பாலை போல சுத்தம் என்னய்யா.. அது சத்தியமாய் எங்கள் இந்தியா என்று தொடங்கும் அந்தப் பாடலை கேட்டாலே படத்தின் ப்ளேவர் தெ‌ரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்