தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் கல்யாண சமையல் சாதம்

வெள்ளி, 18 அக்டோபர் 2013 (11:54 IST)
FILE
பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்திருக்கும் கல்யாண சமையல் சாதம் படத்தின் தமிழக உரிமையை திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் வாங்கியுள்ளார். அவரே அப்படத்தின் தெலுங்கு, கன்னட ரீமேக் ரைட்ஸையும் வாங்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மினிமம் பட்ஜெட்டில் சின்ன நடிகர்களை வைத்து நல்ல படங்களை தரும் ட்ரெண்டை உருவாக்கி அதனை இன்று ராஜபாட்டையாக மாற்றியிருப்பவர் சி.வி.குமார். அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் என்று இவர் தயாரித்த படங்கள் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றின. தற்போது தனது எல்லையை தமிழகம் தாண்டி தென்னிந்தியா முழுக்க விஸ்தாரிக்கயிருக்கிறார். முதல்கட்டமாக கன்னட படம் லூசியாவை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறார். அதையடுத்து தான் விநியோக உரிமை வாங்கியிருக்கும் கல்யாண சமையல் சாதம் படத்தை தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் செய்கிறார்.

இனி தான் தயாரிக்கும் படங்களை தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரேநேரத்தில் தயாரிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம்... வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்