துரை தயாநிதியின் புதிய தொழில் கூட்டணி

சனி, 14 ஜூன் 2014 (12:09 IST)
துரை தயாநிதியின் மீகா என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் வடகறி வரும் 19 -ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை தமிழகத்தில் விநியோகிக்க புதியதொரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறார் துரை தயாநிதி.
வடகறி படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார். சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு ஜெய்யும், ஸ்வாதியும் வடகறியில் இணைந்து நடித்துள்ளனர். நியூ ஜெனரேஷன் படமான இதில் முன்னாள் நீலப்பட நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு ஜெய்யுடன் ஆட்டம் போட்டிருக்கிறார்.
 
ஜுன் 19 வெளியாகும் இந்தப் படத்தை ரேடியன்ஸ் மீடியா வருண் மணியனுடன் இணைந்து வெளியிடுகிறார் துரை தயாநிதி. இந்தத் தகவலை வருண் மணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்