தீராத விளையாட்டு பிள்ளைக்கு யு

புதன், 3 பிப்ரவரி 2010 (17:05 IST)
விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயா‌ரித்த இந்தப் படத்தின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையும் இப்போது சன் பிக்சர்சின் கையில்.

சத்யம், தோரணை என அடுத்தடுத்த தோல்விகளால் கண்டிப்பாக ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற சூழலில் தீராத விளையாட்டு பிள்ளை வெளிவருகிறது.

படத்தில் விஷால் பிளேபாயாக நடித்திருப்பதாலும், நீது சந்திரா உள்ளிட்ட மூன்று ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடித்திருப்பதாலும் படத்துக்கு யு சான்றிதழ் கிடைப்பது கஷ்டம் என்றே அனைவரும் நினைத்திருந்தனர்.

மாறாக, படத்தைப் பார்த்த சென்சார் யு சான்‌றிதழ் வழங்கி ஆச்ச‌ரியப்படுத்தியிருக்கிறது. திரு படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் இசை. அசல், விண்ணைத்தாண்டி வருவாயா, பையா படங்களுடன் தீராத விளையாட்டு பிள்ளை மோதயிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்