தீபாவளி – சிம்பு, விஜய் நேரடிப் போட்டி

திங்கள், 1 அக்டோபர் 2012 (16:42 IST)
FILE
போடா போடி, வேட்டை மன்னன், வாலு... மூன்றில் எது முதலில் என்ற கேட்டபோது கடைசியாக தொடங்கிய வாலுக்கு முதலிடம் தந்தார் சிம்பு. காமெடிப் படமான இது தீபாவளிக்கு வெளிவரும் என்றார்.

எதிர்பாராதவிதமாக வாலு தயா‌ரிப்பில் சில தடங்கல்கள். ச‌ரிதான் நேரத்தை வீணடிப்பானேன் என்று வேட்டை மன்னனில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் போடா போடி போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

தீபாவளிக்கு வாலு வெளிவரவில்லை, அதற்குப் பதில் போடா போடி வெளிவரும் என்று இணையத்தில் சிம்பு தெ‌ரிவித்துள்ளார். தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி வெளிவருகிறது. இதனால் பல படங்கள் தங்களின் தீபாவளி ஆசையை தள்ளி வைத்துள்ள நிலையில் சிம்பு நேரடியாக மோதப் போகிறார்.

போடா போடி சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமியின் முதல் படம் என்பது முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்