திருட்டை மையப்படுத்திய கன்னக்கோல்

செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (15:22 IST)
கன்னக்கோல் வைத்து திருடுவது என்பது கிராமங்களில் பிரபலமான சொலவடை. தமிழில் தயாராகி வரும் கன்னக்கோல் படமும் திருட்டை, திருடர்களை முதன்மைப்படுத்தும் படம்.
ஒரு சின்ன ஊர். அந்த ஊரிலுள்ள அனைவரும் திருடர்கள். இப்போது திருந்தி வாழ்கிறார்கள். ஆனால் நாயகன் பரணி உள்பட நான்கு பேர் மட்டும் திருடர்களாகவே இருக்கிறார்கள். இந்த நால்வரும் திருட்டை கைவிட்டார்களா என்பதை காதலும் கலகலப்பும் சேர்த்து சொல்லியுள்ளார் இயக்குனர் வி.ஏ.குமரேசன். 

திருடர்களைப் பற்றிய கதைகள் சுவாரஸியமானவை. வைக்கம் முகது பஷீரின் கதையில் வரும் திருடர்களை படித்தால் நாள் முழுக்க சிரிக்கலாம். அவ்வளவு ஹாஸ்யம் அவரது எழுத்தில் வடிந்தோடும். திருடனை மையப்படுத்திய மீசை மாதவன் போன்ற படங்கள் மலையாளத்தில் பிரபலம். கன்னக்கோல் அதுபோன்று இருக்குமா?
ஹீரோவாக பரணி நடிக்க காருண்யா என்பவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியுள்ளனர். திருடர்களாக பரணியுடன் தீப்பெட்டி கணேசன், பூவை சுரேஷ், கஞ்சா கருப்பு. இவர்கள் தவிர சிங்கமுத்து, இளவரசு, சார்லி, ராறாகபூர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
பாபியின் இசைக்கு முத்து விஜயன் பாடல்கள் எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்