தாய்லாந்து பட ரிமேக்கில் ப்ரியாமணி

திங்கள், 4 ஜூன் 2012 (10:08 IST)
ப்ரியாமணி என்றொரு நடிகை இருப்பதை அனேகமாக எல்லோரும் மறந்திருப்பர். தெலுங்கு, கன்னடத்தில் அவ்வப்போது தலைகாட்டுகிறவருக்கு லக்கி ப்ரைஸ் அடித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மும்மொழிகளில் தயாராகிற படத்தில் ப்ரியாமணி நடிக்கிறார்.

சாருலதா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் 2007 ல் தாய்லாந்தில் வெளிவந்த அலோன் படத்தின் ரிமேக். அலோன் ஒரு ஹாரர் படம் என்பது முக்கியமானது.

சாருலதாவை பொன்குமரன் என்பவர் இயக்குகிறார். இவர் பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர் தெலுங்கில் படம் இயக்கியிருக்கிறார். மும்மொழிகளில் தயாராகும் சாருலதாவை ஒவ்வொரு மொழியிலும் ஒருவர் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்