தள்ளிப்போன மான் கராத்தே ஆடியோ

வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (13:39 IST)
மான் கராத்தே படத்தின் பாடல்கள் இன்று வெளியாவதாக இருந்தது. தற்போது பாடல்கள் வெளியீட்டை மார்ச் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
FILE

மான் கராத்தேயின் ஆடியோ உரிமையை சோனி வாங்கியுள்ளது. ஒரே நேரத்தில் சிடி, ரேடியோ நோகியா போன் என்று பல மீடியம்களில் பாடல்களை வெளியிட சோனி திட்டமிட்டிருப்பதால் இந்த தாமதம் என கூறப்படுகிறது.

அனிருத்தும் மியூஸிக் சைடில் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 14 ஆம் தேதி வாலு படத்தின் பாடல்களும் வெளியிடப்படுவதாக இருந்து கடைசி நிமிடத்தில் தள்ளி வைக்கப்பட்டது. அதன் ஆடியோ உரிமையையும் சோனி வாங்கியிருந்ததும், பாடல்கள் தள்ளிப் போனதற்கு சோனியே காரணமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்