தரமான பட‌ங்களு‌க்கு இடைவெ‌ளி அவ‌சிய‌ம்

செவ்வாய், 20 மே 2014 (15:51 IST)
ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் போதிய இடைவெளி வேண்டும். அப்போதுதான் தரமான படங்களை யோசிக்கவும், எடுக்கவும் முடியும் என்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன். 
 
சமீபத்தில் பரதன் இயக்கிய அதிதி படப் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இப்படி பேசினார். 
 
சினிமா என்பது பல லட்சக் கணக்கான மக்களை சென்று சேருகின்ற ஊடகம். அதை தரமாகவும், பயனுள்ளதாகவும் கொடுக்கும் பொறுப்பு ஒவ்வோரு இயக்குனர்களுக்கும் இருக்கிறது. தினம் காலை எழுந்ததும் கொத்தனார்கள் வேலைக்கு தயாராவது போல், சினிமாவுக்காகவும் தினம் எழுந்து வேலைக்குப் போவது போல் இருக்கக் கூடாது. 
 
ஒரே அறையில் தங்கியிருந்த நானும், இயக்குனர் தரணி, பரதன் ஆகிய மூவரும் அப்போது இப்படியொரு முடிவெடுத்தோம். அதை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறோம். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் குறைந்தது ஆறு மாதம் இடைவெளியாவது இருக்க வேண்டும் என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்