தமிழ் படிக்கும் தீபா சன்னிதி

வெள்ளி, 6 ஜூன் 2014 (15:49 IST)
தெலுங்கு நடிகை தீபா சன்னிதி தமிழில் இரு படங்களில் நடித்து வருகிறார். சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவாகிவரும் கன்னட லூசியாவின் தமிழ் ரீமேக்கில் இவர்தான் நாயகி. பிரதான வேடத்தில் நடிப்பவர் சித்தார்த். இதுதான் தீபா சன்னிதியின் முதல் தமிழ்ப் படம்.
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தப்பட வாய்ப்பு தீபாவை தேடி வந்தது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் யட்சன். இதில் தீபா ஆர்யாவுக்கு ஜோ‌டி. முதல் படம் முடியும் முன்பே இரண்டாவது படம் கிடைத்ததில் தீபாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 
 
தீபாவுக்கு தமிழ் தடுமாற்றம்தான். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் வலுக்கட்டாயமாக தமிழில் பேச முயற்சிக்கிறார். முதல் படம் முடியும் முன் இரண்டாவது படம் கிடைத்தது என்றால், அந்தப் படங்கள் வெளியானால்...? டஜன் படங்கள் கிடைக்கும், அப்போது தமிழில் தடுமாறினால் நன்றாகவா இருக்கும். அதற்காகதான் தீவிர முயற்சி எடுத்து தமிழ் படித்து வருகிறார்.
 
இந்தப் படங்களின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், வண்கம் சென்னை என்று கொஞ்சு தமிழில் பேசி தீபா உங்களை கொல்லக் கூடும், ஜாக்கிரதை.

வெப்துனியாவைப் படிக்கவும்