தமிழ், இந்தியில் அனேகன்...?

சனி, 24 மே 2014 (13:33 IST)
அஞ்சான் படத்தைத் தொடர்ந்து தனுஷின் அனேகனும் தமிழ், இந்தியில் வெளியாக உள்ளது.
சினிமா வியாபாரத்தில் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க முடியுமா என்றுதான் பார்ப்பார்கள் முதலாளிகள். லிங்குசாமி தான் இயக்கி வரும் அஞ்சானை தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் வெளியிட தீர்மானித்திருக்கிறார். 
 
படத்தின் கதைக்களம் மும்பை என்பது ஒரு காரணம். ரத்தசரித்திரம் படத்தின் மூலம் சூர்யா இந்திப் பேசுகிறவர்களுக்கு நன்கு அறிமுகமும் ஆகியிருக்கிறார். இவ்வளவு சாதகம் இருக்கையில் படத்தை இந்தியில் வெளியிடலாமே என்று அவர் யோசித்ததில் நியாயம் இருக்கிறது.
 

அதேபோல் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தயாராகிவரும் அனேகனும் இந்தியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. சாதாரணமாகவே சர்வதேச சப்ஜெக்டைதான் படமாக்குவார் கே.வி.ஆனந்த். அனேகனில் அவர் இன்னும் ஒருபடி மேலே போயிருப்பதாக கேள்வி. ராஞ்சனா படத்துக்குப் பிறகு தனுஷ் வடக்கேயும் பிரபலம். சரிதான் நம்ம படத்தையும் இந்தியில் வெளியிட்டால் போச்சு என்று படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் முடிவெடுத்துள்ளதாம்.
இந்த இரு படங்கள் தமிழில் வெற்றி பெற்றால் எப்படியும் இந்தியில் ரீமேக் செய்யதான் போகிறார்கள். அதற்கு இவர்களே டப்பிங் செய்து இந்தியில் வெளியிட்டால் கிடைக்கிற லாபத்தை உடனே அறுவடை செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்