தமிழக முதல்வரின் ஆக்சன் படம்

இன்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 86வது பிறந்தநாள். இந்த முதிய வயதிலும் தணியவில்லை அவரது கலை தாகம்.

மீண்டும் திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுத அவரது பேனா திறந்திருக்கிறது. படத்தை இயக்கப் போகிறவர் உளியின் ஓசையை இயக்கிய இளவேனில்.

முதல்வரின் நண்பர் இளவேனில், படம் இயக்குவதே இவரது லட்சியம். ஐம்பது வயது கழிந்த நிலையில் உளியின் ஓசை மூலம் இளவேனிலின் லட்சியம் நிறைவேறியது. உளியின் ஓசை முதல்வரின் சராப்பள்ளம் சாமுண்டி சரித்திரக் கதையை தழுவி தயாரானது.

சரித்திரம் சறுக்கியதால் இந்தமுறை ஆக்சனை கையிலெடுத்திருக்கிறார் இளவேனில். சரித்திரத்தையும், சமூகத்தையும் எழுதிய முதல்வரின் பேனா முதல் முறையாக ஆக்சன் கதைக்காக திறக்கிறது.

உதயகிரண், மீராஜாஸ்மின், வடிவேலு நடிக்கின்றனர். தேவா இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். உளியின் ஓசையை தயாரித்த தி.மு.க. பிரமுகர் ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் ஆறுமுகனேரி எஸ்.பி. முருகேசன் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். பி. கண்ணன் ஒளிப்பதிவு.

படத்தின் பெயரை சொல்லவில்லையே, நீ இன்றி நான் இல்லை. முதல்வரின் முரசொலி கடிதத்திலிருந்து உருவிய வரி போலவே இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்