டேனியல் பாலா‌ஜி நடிக்கும் நிஜக்கதை ஞானகிறுக்கன்

சனி, 1 செப்டம்பர் 2012 (17:28 IST)
FILE
ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு டேனியல் பாலா‌ஜி. படம் ஞானகிறுக்கன். முட்டைக் கண்ணை மேலும் வி‌ரித்து அவர் பார்ப்பதே பயங்கரமாக இருக்கிறது. இளையதேவன் என்பவர் இயக்குகிறார்.

ஞானகிறுக்கன் என்பவன் யார் என்று இளையதேவன் சொன்ன பதில், மனிதர்கள் வேற்றுமையை பார்க்கக் கூடாது, எல்லோரும் சமம் என்று நினைப்பவன் ஞானகிறுக்கன். தனக்காக வாழ நினைப்பவன் சுயநலவாதி. பிறரை மனதில் நினைத்து அவர்களுக்காக வாழ்பவன் ஞானகிறுக்கன் என்றார். அப்துல் கலாமின் மேற்கோளை காட்டி இன்னொரு விளக்கமும் தந்தார். ஓவர் டோஸாகிவிடும் என்பதால் அதனை இங்கு குறிப்பிடவில்லை.

டேனியல் பாலா‌ஜிக்கு ஜோடியாக செந்தி என்பவர் நடிக்கிறார். இவர் நடிகை மீனாளின் சகோத‌ரி. இவர்கள் தவிர அர்ச்சனாகவி, சுஷ்மிதா என்ற புதுமுகம் ஆகியோரும் உண்டு. இரண்டாவது கதாநாயகனாக ஜகராஜஎன்பவர் அறிமுகமாகிறார்.

இசை தா‌ஜ்நூர்.

வெப்துனியாவைப் படிக்கவும்