ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை

திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (11:29 IST)
நடிகர் ஜெயம் ரவி இரண்டாவதுமுறை அப்பாவாகியிருக்கிறார்.
 
ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதிக்கு ஆரவ் என்ற இரண்டு வயது மகன் இருக்கிறார். இந்நிலையில் ஆர்த்தி மீண்டும் கர்ப்பமானார்.

நேற்று காலை ஆறு மணி அளவில் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
 
மனைவியின் பிரசவத்தை முன்னிட்டு படப்பிடிப்புகளை ரத்து செய்திருந்தார் ஜெயம் ரவி.

தாயும், மகனும் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்