லிங்குசாமியின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் அஞ்சான் முழுக்க மும்பையை களமாகக் கொண்ட படம். சூர்யாவுக்கு தாதா, சாதா என்று இரண்டு வேடங்கள். தாதா கேரக்டருக்கு வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் அட்டகாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இசை யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்.
வில்லன்கள் ஏரியா முழுக்க இந்தி வாடை. மனோஜ் பாஜ்பாய், வித்யுத் ஜம்வால், திலீப் தஹில்... இந்தியில் படத்தை எடுத்து தமிழில் டப் செய்தார்களோ என்று தோன்றும் அளவுக்கு இந்தி முகங்கள். சமந்தா ஹீரோயின்.
ஆகஸ்ட் 15 படத்தை வெளியிடுவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்குமுன் ட்ரெய்லர், பாடல்கள் வெளியீடு என்று விளம்பர சடங்குகள் இருக்கின்றன. ஜுன் 12 ட்ரெய்லரை வெளியிடுகின்றனர். தேதி குறிப்பிடும் முன்பே அஞ்சானுக்கு கட் பண்ணியிருக்கும் ட்ரெய்லர் அட்டகாசமாக இருக்கு என்று படம் சம்பந்தப்பட்டவர்கள் ட்விட்டியதில் ட்ரெய்லரைப் பார்க்க எதிர்பார்ப்பு எகிறிப் போய் நிற்கிறார்கள் ரசிகர்கள்.