ஜிகிர்தண்டா திரையரங்கு உரிமை, சன் பிக்சர்ஸ் வாங்கியது

ஞாயிறு, 4 மே 2014 (15:48 IST)
கார்த்திக் சுப்பாராஜின் ஜிகிர்தண்டா படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியது. 

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திரைப்படங்களை வாங்கி வெளியிடுவதில் ஆர்வம் காட்டாமலிருந்த சன் பிக்சர்ஸ் மீண்டும் தங்களின் ட்ராக்குக்கு திரும்பியுள்ளது. சமீபத்தில் அஞ்சான் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் நெட்வொர்க் வாங்கியது. தற்போது ஜிகிர்தண்டாவின் திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளனர்.
 
பீட்சா படத்தின் வெற்றி மற்றும் அதன் புதிதான திரைக்கதை காரணமாக கார்த்திக் சுப்பாராஜின் ஜிகிர்தண்டா மீது ஒருவித எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனை பூர்த்தி செய்வது போல் படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்தது. மே 23 வெளியாகும் இப்படத்தைப் பார்க்க திரையுலகுக்குள்ளும் ஒருவித ஆவல். சித்தார்த், லட்சுமிமேனன், சிம்ஹா, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ் கதிரேசன் தயாரிப்பு.
 
சன் பிக்சர்ஸ் படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளதால் விளம்பரம் மூலம் ஜிகிர்தண்டாவை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் செல்வார்கள் என்பதில் சந்தேகமும் இல்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்