சோனாக்ஷி சின்காவை அடிதடி நாயகியாக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

புதன், 11 ஜூன் 2014 (11:46 IST)
முருகதாஸின் அடுத்தப் படம் எது என்பது தெரிய வந்துள்ளது. படத்தில் நடிக்ககும் சோனாக்ஷி சின்கா படம் குறித்த தகவலை வெளியிட்டார்.
தற்போது விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ். தீபாவளிக்கு கத்தி வெளியாகிறது. கடந்த 6 -ம் தேதி முருகதாஸ் இந்தியில் இயக்கிய ஹாலிடே வெளியானது. துப்பாக்கி படத்தின் இந்தித் தழுவல் இந்தப் படம். படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. துப்பாக்கியில் காஜல் அகர்வால் நடித்திருந்த வேடத்தை ஹாலிடேயில் ஏற்று நடித்தவர் சோனாக்ஷி சின்கா. அவரின் நடிப்பையும், அர்ப்பணிப்பையும் பார்த்து வியந்த முருகதாஸ் சோனாக்ஷியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது. ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில் தான் அடுத்து இயக்கும் படத்துக்கு சோனாக்ஷியை நாயகியாக்கியிருக்கிறார்.
இது நாயகியை மையமாக வைத்து தயாராகும் ஆக்ஷன் படம். இதுபற்றிய தகவலை சமூக வலைத்தளத்தில் சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.
 
முருகதாஸ் இதுவரை இயக்கிய அனைத்துப் படங்களும் ஹீரோவை மையப்படுத்திய ஆக்ஷன் படங்கள். முதல்முறையாக ஹீரோயின் ஓரியண்ட் ஆக்ஷன் படத்தை இயக்குகிறார். இந்தியில் ஹீரோயின் ஓரியண்ட் கதைகள் பரவலாக வெற்றி பெறுகின்றன. கஹானி, குயின் படங்களைத் தொடர்ந்து ரிவால்வர் ராணி, மர்தானி என பல படங்கள் நாயகியை மைப்படுத்தி தயாராகி வருவது முக்கியமானது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்