செப்.2 முதல் விஜய் சேதுபதியின் வன்மம் பாடல்கள்

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (15:28 IST)
அடுத்தடுத்து படங்கள் தந்த விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த வருடம் இதுவரை எந்தப் படமும் வெளியாகவில்லை. இடம் பொருள் ஏவல், வன்மம், புறம்போக்கு, மெல்லிசை, ஆரஞ்சு மிட்டாய் என்று அரை டஜன் படங்களில் முதலில் வன்மம் வெளியாகிறது.
வன்மத்தை ஜெய் கிருஷ்ணா இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, கிருஷ்ணா என்று இரு ஹீரோக்கள். நாகர்கோயில் பகுதியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.
 
தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியிடுகின்றனர். அடுத்த மாதமே படம் திரைக்கு வரும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்