கத்தி படத்தின் பாடல்களை லண்டனில் பிரமாண்ட கலை நிகழ்ச்சியுடன் வெளியிடுவதாக இருந்தனர். இந்நிலையில் நாளுக்குநாள் படத்துக்கு எதிர்ப்பு வலுக்க, சென்னையிலுள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதிக்கு விழா மாற்றப்பட்டுள்ளது.
புலிப்பார்வை பாடல்கள் வெளியீட்டு விழாவில் மாணவர்கள் எதிர்ப்பு கோஷம் போட்டது போல் கத்தி ஆடியோ விழாவிலும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். அசம்பாவிதம் நடக்குமா, அடிதடியில் முடியுமா என்பதெல்லாம் போலீஸ் தரும் பாதுகாப்பில் இருக்கிறது.