சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

செவ்வாய், 24 ஜூலை 2012 (14:31 IST)
3. சகுனி
ஐந்து வாரங்கள் முடிவில் சகுனி சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.6 லட்சங்கள். இதுவரை சென்னையில் சகுனியின் வசூல் 7.07 கோடிகள்.

2. நான் ஈ
தெலுங்கு டப்பிங் படம் ஒன்று சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் கலக்குவது இதுதான் முதல்முறை. நான் ஈ இந்த வாரமும் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 40.15 லட்சங்கள். இதுவரையான சென்னை வசூல் 2.87 கோடி.

1. பில்லா 2
மீண்டும் அதே முதல் இடத்தில் பில்லா 2. படம் சுமார் என்றாலும் ஓபனிங் அசத்துகிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.42 கோடி. சென்னையில் இதுவரை அதாவது முதல் பத்து தினங்களில் 6.02 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்