செந்தமிழன், பவர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் குருவிக்காரன் சோலை

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (17:40 IST)
குருவிக்காரன் சோலை என்ற படத்தில் செந்தமிழன் சீமானும், பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடிக்கின்றனர்.
 
சீமான் கடைசியாக நடித்த படம் கண்டுபிடி கண்டுபிடி. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக சீமான் நடித்தார். அதன் பிறகு அவர் படம் நடிக்கவோ, இயக்கவோ இல்லை. கட்சிப் பணிகளை கவனித்து வந்தார்.
 
தற்போது எஸ்.நாதன் எழுதி இயக்கும் குருவிக்காரன் சோலை என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நாயகனாக ஜெய்காந்தும், நாயகியாக கிரிஜாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நடிக்கும் இன்னொருவர் பவர்ஸ்டார் என அறியப்படும் சீனிவாசன். 
 
தனது குடும்பத்துக்காக காதலனை காதலி பழிவாங்குவதுதான் குருவிக்காரன் சோலை படத்தின் கதை. தஷி இசையமைக்க ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். குற்றாலம், தலக்கோணம் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்