சூது கவ்வும் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ராஜசேகரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஜீவிதா வாங்கியிருந்தார். விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளது. அறிமுக இயக்குனர் பி.சந்தோஷ் இந்த ரீமேக்கை இயக்குகிறார். விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் ஜீவிதாவின் கணவரும் நடிகருமான டாக்டர் ராஜசேகர் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு முடிவடையும் நிலையில் உள்ளது.