சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் - ஆர்யா

வியாழன், 11 செப்டம்பர் 2014 (17:49 IST)
அவன் இவன் படத்துக்குப் பிறகு விஷாலும், ஆர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். சுசீந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
 
விஷால் தற்போது பூஜை, ஆம்பள படங்களில் நடித்து வருகிறார். டிசம்பரில் அவர் நடிக்கும் நேரடி தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. அத்துடன் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். வேந்தர் மூவிஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
 
இதில் விஷால் ஹீரோ. சின்ன வேடம் ஒன்றில் ஆர்யா நடிக்கிறார். நட்புக்காக சின்ன வேடத்தில் நடிக்க ஆர்யா ஒப்புக் கொண்டுள்ளார்.
 
மீண்டும் அவன் இவன் நடிகர்கள் ஒன்றிணைவதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்