சீற்றம் குறையாத வேங்கை

சனி, 27 நவம்பர் 2010 (13:15 IST)
வேங்கை என்ற டைட்டிலை சேம்ப‌ரில் முறைப்படி பதிவு செய்து வைத்திருப்பவர் அறிமுக இயக்குனர் பாலா. இந்நிலையில் ஹ‌ி தனது புதிய படத்துக்கு வேங்கை என்று பெயர் வைத்து விளம்பரமும் கொடுத்தார்.

பாலாவும், ஹ‌ரியும் இது விஷயத்தில் பேசி முடிவு செய்திருப்பார்கள் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் விஷயம் வேறு.

இயக்குனர்கள் சங்கத்தில் இந்த‌ப் பிரச்சனை எழுந்த போதும் டைட்டிலை விட்டுத்தர மாட்டேன் என்று நியாயத்துக்குப் புறம்பாக பிடிவாதமாகவே இருந்திருக்கிறார் ஹ‌ி.

மேலும் பாலாவின் முறையான அனுமதி இல்லாமலேயே வேங்கை என விளம்பரமும் தந்துள்ளார். இது சேம்பர் விதிமுறைக்கும், நியாயத்துக்கும் எதிரானது என்பதால் நீதிமன்றத்துக்குப் போவப்போவதாக கூறி வருகிறார் பாலா.

வெப்துனியாவைப் படிக்கவும்