சினிமாவுக்காக விலா எலும்பை உடைத்தார், சிகரெட் பிடித்தார்...

வியாழன், 26 ஜூன் 2014 (11:53 IST)
தெலுங்கு சினிமாவின் சின்சியர் நடிகை என்ற பெயரை ஒரே படத்தில் வசப்படுத்தியுள்ளார் விசாகா சிங். அவரைப் பற்றி ஆச்சரியமாக குறிப்பிட ரவுடி ஃபெல்லோ (Rowdy Fellow) படக்குழுவுக்கு நிறைய இருக்கிறது.
2007 -ல் தெலுங்குப் படத்தில் நடிகையாக அறிமுகமான விசாகா சிங் இன்றுவரை ஏறக்குறைய 18 படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் 2007 -ல் தெலுங்கில் அறிமுகமான அவர் மீண்டும் தெலுங்குக்கு சென்றிருப்பது இந்த வருடத்தில்தான். படம் ரவுடி ஃபெல்லோ.
 
கிருஷ்ண சைதன்யா இயக்கும் இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விபத்துக்குள்ளாகி விசாகா சிங்கின் விலா எலும்புகளில் ஒன்று உடைந்தது. அந்த வலியுடன் காட்சியை முடித்துக் கொடுத்த பிறகே மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிவரும் என்று மருத்துவர்கள் அவரை எச்சரித்தனர்.
 
இதே படத்துக்காக தனக்கு ஒருபோதும் விருப்பமில்லாத சிகரெட்டையும் புகைத்துப் பழகியிருக்கிறார். இந்தப் படத்தில் விசாகா சிங்குக்கு துடுக்கான கல்லூரி மாணவி வேடம். கதைப்படி அவர் ஸ்டைலாக புகைப்பிடிக்க வேண்டும். ஆனால் விசாகா சிங்குக்கோ சிகரெட் என்றால் அலர்ஜி. சுத்தமாக பிடிக்காது. தவிர லைட்டரால் சிகரெட்டை பற்ற வைக்கவும் தெரியாது. இந்தக் காரணங்களுக்காக காட்சியை தவிர்க்காமல் சிகரெட் பிடிக்க பழகியிருக்கிறார். பிறகு தேர்ந்த புகைப்பிடிப்பவராக நடித்து அசத்தியும் இருக்கிறார்.
 
அதுவொரு வித்தியாசமான அனுபவம் என்கிறார் விசாகா சிங். பிடித்த உங்களுக்கு மட்டுமில்லை படிக்கிற எங்களுக்கும்தான்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்