சலீமுக்கு தெலுங்கில் கிராக்கி

வியாழன், 18 செப்டம்பர் 2014 (17:54 IST)
மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடித்திருந்தார். படம் ஆந்திராவில் வெற்றி. சமீபத்தில் வெங்கடேஷுக்கு கிடைத்த வெற்றி இந்த ரீமேக் படம்தான். அதனால் பிறமொழிப் படங்கள் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷ் ஆர்வம் காட்டுகிறார். சலீமை இயக்கிய நிர்மல் குமாரை அழைத்து வெங்கடேஷ் ரீமேக் குறித்து பேசியதாகவும் தெரிகிறது. 
 
சலீம் தெலுங்கு ரீமேக்கை நிர்மல் குமார் இயக்குவரா இல்லை வேறு யாராவது இயக்குவார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை. யார் இயக்கினாலும் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக உள்ளார் வெங்கடேஷ்.
 
சலீம் கொரியப் படமான பிக் பேங்கின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்