சற்குணம் படத்திலிருந்து ஜிப்ரான் விலகல், காரணம் பட்ஜெட் பற்றாக்குறை...?

புதன், 18 ஜூன் 2014 (11:07 IST)
சற்குணத்தின் வாகை சூட வா படம்தான் ஜிப்ரானுக்கு முகவரி தந்த படம். அப்படிப்பட்டவர் சற்குணத்தின் புதிய படத்துக்கு இசையமைக்க சம்மதித்து கடைசி நிமிடத்தில் படத்திலிருந்து விலகினார். கமலின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களுக்கு ஜிப்ரான் இசையமைப்பதால் நேரப்பற்றாக்குறை, அதனாலேயே சற்குணம் படத்திலிருந்து விலகினார் என கூறப்பட்டது. ஆனால் உண்மை அது அல்ல என்கிறார்கள்.
சற்குணம் இயக்கும் படத்தை இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படம் இது. ஒவ்வொரு டிபார்ட்மெண்டுக்கும் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. படத்தின் இசைக்கும் ஆர்கெஸ்ட்ராவுக்கும் ஒதுக்கப்பட்டது மிகக்குறைவான தொகை என கூறப்படுகிறது. இந்தப் பணத்தில் திறமையான ஆர்கெஸ்ட்ராவை ஒழுங்கமைக்க முடியாது என்பதாலேயே அடுத்தப் படத்தில் இணைந்து பணியாற்றலாம் என்று சுமூகமாக சற்குணத்தின் படத்திலிருந்து வெளியேறியிருக்கிறார் ஜிப்ரான். 
 
கமலின் இரு படங்களுக்கு இசையமைத்து வரும் இவரையே த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்குக்கும் இசையமைக்க கமல் பரிந்துரைத்திருக்கிறார். இளையராஜாவுக்குப் பிறகு தொடர்ச்சியாக கமல் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஜிப்ரானுக்கே கிடைத்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்