சற்குணத்துக்கு வாய்ப்பு தரும் பாலா

வியாழன், 1 மே 2014 (17:30 IST)
களவாணி, வாகை சூட வா என இரு வெற்றிப் படங்கள் தந்தும் நையாண்டி என்ற ஒரேயொரு தோல்வி சற்குணத்துக்கு சறுக்கலாக அமைந்துவிட்டது. அந்த தோல்வியிலிருந்து எழுந்துவர சற்குணத்துக்கு உதவ முன் வந்துள்ளார் இயக்குனர் பாலா.
மாயாவி, பரதேசி படங்களை தயாரித்த பாலாவின் பி ஸ்டுடியோஸ் தொடர்ந்து படங்கள் தயாரிக்க உள்ளது. முதல் படமாக விஜய் சேதுபதி நடிக்கும் காவியத்தலைவனை தயாரிக்கிறார் பாலா. அதையடுத்து சற்குணம் இயக்கும் படத்தை அவர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தாரை தப்பட்டை படத்தை பாலா இயக்கி வருகிறார். சசிகுமார், வரலட்சுமி நடிக்கும் இந்தப் படத்துக்காக இளையராஜா 12 பாடல்கள் கம்போஸ் செய்துள்ளார். கரகாட்ட கலையை மையமாக வைத்து தாரை தப்பட்டை உருவாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்