சரத் ஜோடி சினேகா

வெள்ளி, 12 மார்ச் 2010 (18:03 IST)
ஜக்குபாய் சரத்குமாருக்கு பே‌ரிடி. படம் எதிர்பார்த்த அளவு போகாததுடன் எதிர்பார்க்காத அளவுக்கு தோல்வியும் அடைந்தது. அடுத்து என்ன? கேள்விக்குறியுடன் இருந்தவருக்கு இரு பதில்கள் கிடைத்திருக்கிறது.

ஒன்று ஏற்கனவே நாம் கூறியிருந்தபடி மலையாளத்தில் தயாராகும் ஓ‌ரிடத்தொரு போஸ்ட்மேன் என்ற படத்தில் குஞ்சாகா போபனுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இரண்டாவது தமிழில் கிடைத்திருக்கும் வாய்ப்பு. நடிகர் சங்க இணை செயலாளராக இருக்கும் செல்வரா‌ஜ் இயக்கும் படத்தில் சரத் ஹீரோ. இவருடன் சினேகா, ஸ்ருதி (இந்திரவிழா ஹேமமாலினி) நடிக்கின்றனர்.

சரத்குமாருடன் சினேகா ஜோடி சேரும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்