சமுத்திரக்கனி படத்தில் நானி

புதன், 25 ஜூலை 2012 (18:14 IST)
வெப்பம் படத்தில் நடித்தபோது நானியை யாருக்கும் தெ‌ரியாது. இப்போது நான் ஈ வந்திருக்கிறது. நானியை தெ‌ரியாதவர்கள் யாருமில்லை. ஒரே படத்தில் ஓஹோவென்று மாறியவருக்கு ஃபீல்டில் பிரமாத டிமாண்ட்.

நமக்குக் கிடைத்த தகவல்களின்படி சமுத்திரக்கனியின் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவியுடன் முக்கியமான வேடத்தில் நானி நடிக்கிறார். நிமிர்ந்து நில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகிறது. தமிழ் மார்க்கெட்டை ஜெயம் ரவி பார்த்துக் கொள்வார். தெலுங்கு மார்க்கெட்டுக்கு நானி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

நானியும் இந்த இரண்டு மாங்காய் சமாச்சாரத்துக்காகதான் ஒத்துக் கொண்டார் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்