சந்தோஷ் சிவனின் சிலோன்

புதன், 19 டிசம்பர் 2012 (19:31 IST)
FILE
உருமி படத்தை இயக்கிய சந்தோஷ் சிவனின் அடுத்தப் படம் சிலோன். கரண்‌ட் கம்பியை கட்கத்தில் விடுறாரே என்று பெயரை‌ப் பார்த்த அனைவரும் சந்தோஷ் சிவனுக்காக வருந்தினாலும் சிலோன் விஷயத்தில் சின்சியராக இருக்கிறார் மனிதர்.

சந்தோஷ் சிவனின் தொடக்கமே டெர‌ரிஸ்ட், மல்லி என்று பிரச்சனைக்கு‌ரிய இடத்தில் இருந்துதான் ஆரம்பமானது. சிலோன் விடுதலைப்புலி‌க‌ள் இயக்கத்தை பற்றியது என ஒரு தகவல். ஆனால் சந்தோஷ் சிவன் அதனை மறுக்கிறார்.

இது எந்த இயக்கத்தையும் பற்றியதல்ல, போர் நடந்து கொண்டிருக்கையில் ஓர் இளைஞன் ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறான், அவனை சுற்றி நடக்கும் கதை என அவுட்லைனை தந்துள்ளார்.

படப்பிடிப்பு எங்கே நடக்கிறது, யார் நடிப்பது... எதுவும் இன்னும் முடிவாகாத நிலையில் இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர் என்ற புதியவரை தேர்வு செய்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்