இந்த மாதம் வெளியாகப் போகும் படங்களில் சதுரங்க வேட்டை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடமும், திரையுலகினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படத்தைப் பார்த்த திருப்பதி பிரதர்ஸ் உடனடியாக படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கினர். ஜெயிக்கிற குதிரைகளில் மட்டுமே பணம் கட்டுகிறவர்கள் சதுரங்க வேட்டையை வாங்கியதும் அதன் சந்தை மதிப்பு அதிகரித்தது. ட்ரெயலர் வெளியான பிறகு படம் மீது ரசிகர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ட்ரெய்லரை ரஜினியும் பார்த்துள்ளார். அவருக்கு ட்ரெய்லர் பிடித்துள்ளது. உடனடியாக போன் செய்து மனோபாலாவை பாராட்டியிருக்கிறார்.