சதுரங்க வேட்டையின் உரிமையை வாங்கிய திருப்பதி பிரதர்ஸ்

வெள்ளி, 20 ஜூன் 2014 (12:52 IST)
படங்களை தயாரிப்பதுடன் முக்கிய படங்களின் விநியோக உரிமையையும் வாங்கி வருகிறது திருப்பதி பிரதர்ஸ். தற்போது ஓடிக் கொண்டிருக்கும் மஞ்சப்பை, சூப்பர்ஹிட்டான கோலிசோடா ஆகிய படங்களை தமிழகத்தில் விநியோகித்தது திருப்பதி பிரதர்ஸ்தான். 
 
அடுத்து மனோபாலாவின் சதுரங்க வேட்டை படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளனர்.
இந்தியில் கொடிகட்டிப் பறக்கும் தமிழக கேமராமேன் நட்டு எனப்படுகிற நட்ராஜ். அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடித்து தனது நடிப்பாசையை அவர் தீர்ப்பதுண்டு. சதுரங்க வேட்டையில் நாயகனாக அவர்தான் நடித்துள்ளார். வினோத் என்பவர் இயக்கம்.
 
படம் சிறப்பாக வந்துள்ளதால் திருப்பதி பிரதர்ஸ் சதுரங்க வேட்டையின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது.
 
தற்போது யுடிவி-யுடன் இணைந்து அஞ்சான் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்