சச்சினின் சாதனையை முறியடித்த ரஜினி

செவ்வாய், 6 மே 2014 (15:50 IST)
ட்விட்டரில் இணைந்த ரஜினி சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
நேற்று ரஜினிகாந்த் ட்விட்டரில் இணைந்தார். அவர் முதல் ட்வீட்டை செய்யும் முன்பே ஆயிரக்கணக்கானவர்கள் அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர். ஐம்பதாயிரம் ஒரு லட்சம் என்று இந்த எண்ணிக்கை எகிறியது.
 
சச்சின் ட்விட்டரில் இணைந்தவேளை நான்கு நா‌ட்களில் இரண்டு லட்சம் பேர் அவரை ஃபாலோ செய்தனர். இதனை இரண்டே தினங்களில் எட்டிப் பிடித்த ரஜினி சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்