நடிகர் கிருஷ்ணாவின் திருமணம் நேற்று காலை கோவை ஜெனீஸ் கிளப்பில் நடந்தது.
FILE
அலிபாபா, கற்றது களவு படங்களில் நடித்த கிருஷ்ணா கழுகு படத்துக்குப் பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன், இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி. விஷ்ணுவர்தனின் அடுத்தப் படத்தில் ஆர்யாவுடன் கிருஷ்ணாவும் நடிக்கிறார்.
கிருஷ்ணாவுக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியரான கைவல்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டார் சம்மதத்துடன் தீர்மானிக்கப்பட்ட இவர்களின் திருமணம் இன்று காலை கோவையில் நடந்தது. திருமணத்தில் விஷ்ணுவர்தன் அவர் மனைவியும் காஸ்ட்யூம் டிஸைனருமான அனுவர்தன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் ராதாரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.