கேரளாவில் நடைபெற இருக்கும் விஜய் - சிம்புதேவன் படத்தின் படப்பிடிப்பு

திங்கள், 22 செப்டம்பர் 2014 (13:37 IST)
விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். வரும் தீபாவளிக்கு கத்தி வெளியாகிறது.
அதனையடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஸ்ருதி, ஹன்சிகா என இரு ஹீரோயின்கள். ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க நட்டு என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை தயாரிப்பது விஜய்யின் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார்.
 
நவம்பர் முதல் வாரத்தில் சென்னையில் சின்னதாக பூஜை போட்டு படத்தை ஆரம்பிக்கின்றனர். முதல் ஷெட்யூலை கேரளாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 
ஃபேண்டஸி திரைப்படமாக இது உருவாக உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்