கேன்ஸ் செல்லும் பரதேசி

செவ்வாய், 12 பிப்ரவரி 2013 (13:03 IST)
FILE
தமிழில் மணிரத்னம் போன்ற ஒருசிலருக்குதான் சர்வதேச அளவில் ஒரு படத்தை கொண்டு சேர்க்கும் நுணுக்கம் தெரியும். அதை ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் மற்றவர்களுக்குபகிர்ந்தளிப்பார்கள். ஆனால் அனுராக் காஷ்யப் வித்தியாசமானவர். உலக அளவில்பிரபலமான இயக்குனராக இருந்தாலும் உள்ளூர் திறமைசாலிகளை பாராட்ட தயங்காதவர்.

காஷ்யபுக்கு பாலா வெறும் உள்ளூர் திறமைசாலி மட்டுமல்ல. பாலாவின் பரம ரசிகர் அவர். பரதேசியைப் பார்த்து வியந்தவர் தமிழகத்துடன் இப்படம் நின்று போகக் கூடாது என ஆங்கில, இந்தி சப் டைட்டில்களுடன் வட மாநிலங்களில் குறிப்பாக உத்திரபிரதேசம், அசாமில் வெளியிடுகிறார்.

பரதேசியைப் பார்த்தால் எந்தவொரு இயக்குனரும் மிரண்டு விடுவார் என்று அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். அத்துடன் கேன்ஸில் படத்தை திரையிட வேலைகள் நடந்து வருகின்றன.

பரதேசி நிச்சயமாக கேன்ஸ் போட்டிப் பிரிவுக்கு தேர்வாகி உலக அளவில் கவனத்தை பெறும் என்பதில் படம் பார்த்தவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை போலவே பார்க்காத நமக்கும் இருக்கிறது.

தமிழின் நிஜமான விஸ்வரூபத்தைப் பார்க்க ரசிகர்களே... தயாராகுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்