கட்சியில் யாரும் சொல்லாவிட்டாலும் தனக்கு கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்று ரொம்பவே நம்பிக் கொண்டிருந்தார் குஷ்பு. இதற்காக நெஞ்சுக்கு நீதி தொடங்கி பல புத்தகங்களும் படித்து மனப்பாடம்கூட செய்திருந்தார், மேடையில் முழங்கலாமே.
ஆனால் கட்சித் தலைமை இவருக்கு கல்தா கொடுத்திருக்கிறது. குஷ்பு மட்டுமில்லை, கலைத்துறையைச் சேர்ந்த யாருக்கும் சீட் இல்லை. அதிமுகவிலும் இதுதான் நிலைமை. ராதாரவியையும் டீலில் விட்டிருக்கிறார் அம்மா.