கார்த்தியின் மெட்ராஸ் படத்துக்கு யுஏ

வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (18:55 IST)
கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ் படத்துக்கு சென்சார் யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
அட்டகத்தி படத்தை இயக்கிய ரெஞ்சித்தின் இரண்டாவது படம், மெட்ராஸ். வடசென்னையை மையமாக வைத்து தயாராகியிருக்கும் படம். கேத்ரின் தெரேஸா ஹீரோயினாக நடித்துள்ளார்.
 
ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படம் இந்த மாதம் 26 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் படத்துக்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்