Vishal, Lakshmi Menon Liplock
திரு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஷால், லட்சுமிமேனனின் முத்தக் காட்சி இரு இடங்களில் வருகிறது. இந்தக் காட்சியை நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் என்றது சென்சார். கதைக்கு அந்தக் காட்சிகள் தேவை என்பதால் மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பினர். யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே 30 சதவீத வரிவிலக்குக்கு படம் தகுதி பெறும்.
மறு தணிக்கையில் படத்தைப் பார்த்தவர்கள் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் என தெரிவித்தனர். அவர்கள் குறிப்பிடும் காட்சிகள் கதைக்கு மிக முக்கியமானவை. அவைகளை நீக்கினால் திரைக்கதையின் கோர்வை பாதிக்கப்படும். அது பற்றி எடுத்துச் சொல்லியும் சென்சார் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.