காசிமேட்டில் தயாராகும் கிருமி

வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (18:53 IST)
மதயானைக் கூட்டம் படத்தில் நடித்த கதிரின் அடுத்தப் படம் கிருமி. க்ரைம் த்ரில்லரான இது சென்னை காசிமேட்டில் படமாக்கப்பட உள்ளது.
 
த்ரில்லர், பேய் இரண்டுக்கும்தான் இப்போது தமிழில் மார்க்கெட். கிருமி ஒரு த்ரில்லர். கதிர், ரேஷ்மி மேனன் நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அனு சரண் இயக்குகிறார். இவர் ஆஸ்ட்ரேலியாவில் சில குறும்படங்கள் எடுத்துள்ளார். படம் இயக்குவது இதுவே முதல்முறை.
 
சென்னை இளைஞன் ஒருவன் தனது வாழ்க்கையில் சில சம்பவங்களை சந்திக்க நேர்கிறது. அது அவனது வாழ்க்கையையே மாற்றிப் போடுகிறது. அது என்ன என்பதுதான் கிருமி படத்தின் கதையாம்.
 
விரைவில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்