கவுதம் மேனனுடன் இணைந்த விக்ரம்: துருவ நட்சத்திரம்

வியாழன், 24 நவம்பர் 2016 (18:51 IST)
சூர்யா நடிக்க மறுத்த துருவ நட்சத்திரம் கதையில் தற்போது விக்ரமை வைத்து படத்தை எடுக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.


 


கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பூஜை போடப்பட்ட படம் துருவ நட்சத்திரம். கவுதம் மேனன் முழுமையாக ஸ்கிரிப்டை முடிக்காததாலும், படத்தின் கதை முழுக்க ஆங்கிலப்பட பாணியில் இருந்ததாலும் துருவ நட்சத்திரம் படத்திலிருந்து சூர்யா விலகினார்.

அவர் நடிக்க மறுத்த அதே கதையில் தற்போது விக்ரமை வைத்து படத்தை எடுக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளார். விக்ரம் அடுத்து நடிக்கும் விஜய் சந்தர் படம் முடிந்த பிறகு இந்தப் படம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
 
அமெரிக்காவில் தயாராகும் இந்தப் படத்தை கவுதம் மேனனின் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்