களஞ்சியத்தின் வலியுடன் ஒரு வார்த்தை

வியாழன், 31 அக்டோபர் 2013 (18:34 IST)
FILE
வலியுடன் ஒரு காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் களஞ்சியமும் கலந்து கொண்டார். விழாவில் தனது ஊர்சுற்றி புராணம் படத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்.

இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் நடிகை அஞ்சலி பாதியில் ஓடினார். இன்றுவரை அவர் படப்பிடிப்புக்கு திரும்பவில்லை. அதன் காரணமாக படமும் பாதியில் நிற்கிறது. போட்ட காசுக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார் களஞ்சியம்.

இயக்குனர்கள் சங்கம், தயா‌ரிப்பாளர்கள் சங்கம், பெப்சி என்று எத்தனையோ சங்கங்கள் இருந்தும் அஞ்சலியை களஞ்சியத்தின் படத்தில் நடிக்க வைக்க எந்தச் சங்கமும் முயற்சி எடுக்கவில்லை. களஞ்சியம் அளித்த புகார்களை அவர்கள் கண்டு கொண்டதாகவே தெ‌ரியவில்லை. பிரச்சனைகளை தீர்க்கத்தானே இந்த சங்கங்கள்? இவர்கள் இப்படி நடந்து கொண்டால் சிறு முதலீட்டு தயா‌ரிப்பாளர்கள் எப்படி நம்பிக்கையுடன் படம் தயா‌ரிக்க முடியும் என கேள்வி எழுப்பினார் களஞ்சியம்.

நியாயமான கேள்வி. தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்று பெயரளவில் தென்னிந்தியாவை தாங்கிப் பிடிக்கும் சங்கங்கள் இதற்கு என்ன பதில் தரப்போகின்றன? இனியாவது தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை, தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் வைக்கும் சொரணை இவர்களுக்கு வருமா?

வெப்துனியாவைப் படிக்கவும்