தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் மோகன்லால் நடிப்பில் பெருச்சாளி என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி வருகிறார். அரசியல் நையாண்டிப் படமான இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் கமல் நடிக்கயிருக்கிறார் என்பதுதான் சமீபத்திய தகவல்.