கமலின் தலைவன் இருக்கின்றானில் அமீர்?

திங்கள், 2 ஏப்ரல் 2012 (20:55 IST)
FILE
விஸ்வரூபம் இன்னும் வெளியாகாத நிலையில் கமலின் அடுத்தப் படம் தலைவன் இருக்கின்றான் குறித்து தாறுமாறாகச் செய்திகள்.

முதலில் ஷங்கர் இந்தப் படத்தை இயக்குவதாகச் சொன்னார்கள். பிறகு ஜாக்கிசான், சல்மான்கான் எல்லாம் படத்தில் உண்டு என்று காதில் தோட்டம் வைத்தார்கள். லேட்டஸ்ட் நமது அமீர். கமல் படத்தை இயக்கும் ஆர்வத்தை அமீர் வெளியிட்டதையொட்டி, தலைவன் இருக்கின்றானை அமீர் இயக்குவதாக வதந்தி கிளம்பியிருக்கிறது.

கமலே சொல்லும் வரை இந்தக் கதைகளை தமிழகமே நம்பாதே என்பதுதான் நமது அட்வைஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்