கஜபுஜ புஜகஜ வடிவேலு

புதன், 3 ஏப்ரல் 2013 (19:05 IST)
FILE
ம்... சென்னையில் வெயிலின் பாதிப்பு அதிகம். அதற்கும் கஜபுஜத்துக்கும் நேரடி தொடர்பில்லை. இது வடிவேலு நடிக்கும் படத்தின் பெயரின் ஒரு பகுதி.

அரசியல் சூறாவளியில் சிக்கி சினிமா அனாதையாகிப் போன வடிவேலு தனது இரண்டாவது என்ட்ரி மிகப்பிரமாண்டமாக அமைய வேண்டும் என விரும்பினார். விரும்பினார் என்பது நாகரிக வார்த்தை. சவாலான கொள்கை முடிவு என்பதே சரி.

இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசியின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என சிம்புதேவனை ஸ்கிரிப்ட் எழுதச் சொன்னார். அவரும் ஒரு வருடத்தை செலவிட்டார். அதற்கு மேலும் விழலுக்கு நீர் இறைக்க விரும்பாதவர் புலிகேசி புராஜெக்டிலிருந்து விலகிக் கொள்ள அடுத்து கிடைத்தவர் யுவராஜா. இவர் சொன்ன சரித்திர டிராமாதான் வடிவேலின் ரீ என்ட்ரியாக இருக்கப் போகிறது. படத்தின் பெயர் கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்.

பெயரைப் படித்தவர்களுக்கு படத்தின் கதை என்ன என்று விளக்க வேண்டியதில்லை. தற்போதைய நிலவரப்படி அதிக படங்களை அண்டர் புரொடக்ஷனில் வைத்திருக்கும் ஏஜிஎஸ் படத்தை தயாரிக்கிறது. டி.இமான் இசை.

வடிவேலு மேக்கப் போட்டு கேமரா முன் நிற்கிறவரை எந்த செய்தியும் உறுதியில்லை என்பதையும் இதனுடன் சேர்த்துப் படிக்கவும். வடிவேலின் சமீபத்திய ராசி அப்படி.

வெப்துனியாவைப் படிக்கவும்