ஓ மை காட் ரீமேக்கில் வெங்கடேஷ் ஜோ‌டியாகும் ஸ்ரேயா

செவ்வாய், 3 ஜூன் 2014 (13:40 IST)
இந்தியில் ஒரேயொரு படம் நடித்து வருகிறார் ஸ்ரேயா. அதுவும் முடியும் நிலையில் உள்ளது. அந்தப் படத்தை தவிர்த்து வேறு எந்த மொழியிலும் ஸ்ரேயாவுக்கு படங்களில்லை. இந்நிலையில் இந்தியில் வெளியான ஓ மை காட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அக்ஷய் குமார் தயாரிப்பில் இந்தியில் வெளியான ஓ மை காட் படத்தில் பரேஷ் ராவல் நாயகனாக நடித்திருந்தார். அக்ஷய் குமாருக்கு கடவுள் விஷ்ணுவாக கௌரவ வேடம். படம் இந்தியில் ஹிட். அதனை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள்.
 

பரேஷ் ராவல் நடித்த வேடத்தை தெலுங்கில் செய்கிறவர் வெங்கடேஷ். அவரது மனைவியாக ஆறு வயது குழந்தையின் அம்மாவாக நடிக்க சீனியர் நடிகைகளைத் தேடி கடைசியில் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அக்ஷய் குமாரின் விஷ்ணு வேடத்தை தெலுங்கில் செய்கிறவர் பவன் கல்யாண்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழிலும் ஒரு படம் நடிக்க உள்ளாராம் ஸ்ரேயா. படம் குறித்த தகவல் தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்